மாஸ்டர் பட வில்லனின் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

மாஸ்டர் பட வில்லனின் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

Update: 2021-01-04 18:35 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் அரவான்,அங்காடித்தெரு,வெயில்,காவியத்தலைவன் ஆகிய படங்களை வெற்றிகரமாக இயங்கிபவர் ஆவர். தற்போது அவர் ஜிவி பிரகாஷ் நடித்த 'ஜெயில்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வசந்தபாலன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தி லிஃப்ட் பாய்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தை தான் வசந்தபாலன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த 'அர்ஜுன் தாஸ்' முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் அனைவரும் அவர்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Similar News