சூப்பர் ஸ்டாருக்கு கண்ணீரை வரவழைத்த 'டான்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Update: 2022-05-20 05:48 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.




இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டான்' வெளியான நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.




இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'டான்' திரைப்படத்தை பாராட்டியுள்ளார். இதுபற்றி சிவகார்த்திகேயன் கூறியதாவது, 'ரஜினி சார் இந்த படத்தை பார்த்துவிட்டு அருமையாக உள்ளது கடைசி 30 நிமிடங்கள் என்னாலேயே கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை' என கூறியதாக தெரிவித்தார்.

Similar News