சூப்பர் ஸ்டாரின் மகள் அமிதாபச்சனுக்கு கொடுத்த பரிசு!

சூப்பர் ஸ்டாரின் மகள் அமிதாபச்சனுக்கு கொடுத்த பரிசு!

Update: 2021-02-25 08:10 GMT

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் மோகன்லால். அந்தவகையில்  கடந்த வாரம் மோகன்லால் நடித்து வெளியான 'த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் அமேசானில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மோகன்லால் அவரது மகள் எழுதிய புத்தகம் ஒன்றை அமிதாப்பச்சனுக்கு அனுப்பி உள்ளார். அந்த புத்தகத்தை பார்த்து அமிதாப் பச்சன் டுவிட் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

இந்நிலையில் மோகன்லால் அவரது மகள் விஸ்மயா எழுதிய 'கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்' என்ற புத்தகத்தை பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்தார். இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன் அவரது டுவிட்டரில் மோகன்லால் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.


 

அந்த டுவிட்டர் பதிவில் கூறியுள்ளது:மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பரிசை அனுப்பி இருக்கிறார். அவரது மகள் விஸ்மயா எழுதிய ’கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகத்தை எனக்கு அனுப்பி உள்ளார். உணர்வுபூர்வமான கவிதைகள் மற்றும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தகத்தை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். மோகன்லால் மகளின் திறமைகள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News