பிரபல ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா !

Update: 2021-10-19 00:30 GMT

பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியலில் பிரபல தென்னிந்திய நடிகர்களையே பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.




 


பிரபல ஆங்கில பத்திரிகையான 'போர்ப்ஸ் இந்தியா' தென்னிந்திய சினிமாவில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள டாப் 30 சினிமா பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் டாப் 10 பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா 10'க்கு 9.88 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தமிழ் நடிகரான சூர்யா 9.37 புள்ளிகள் பெற்று 9'வது இடத்தைப் பிடித்துள்ளார்.




 


தனுஷ் 9.33 புள்ளிகள் பெற்று 13வது இடத்திலும், விஜய் சேதுபதி 9.22 புள்ளிகள் பெற்று 29வது இடத்தையும் பிடித்துள்ளனர். பிரபலங்களின் பதிவுகள், புகைப்படங்கள் போன்றவற்றிற்கு ரசிகர்கள் இடும் லைக், கமெண்ட்'களை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News