விஜய் ஆண்டனி இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். எச்சரிக்கும் இந்து மக்கள் கட்சி!
இந்து கடவுள்களை அவமதிக்கின்ற வகையில் காளி படத்தோட பிச்சைக்காரன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் 'பிச்சைக்காரன்- 2 ' உருவாக உள்ளது. இந்த இரண்டாம் பாகத்தினை விஜய் ஆண்டனியே இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: இந்து கடவுள்களை அவமதிக்கின்ற வகையில் காளி படத்தோட பிச்சைக்காரன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இதனை வெளியிட்ட விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும். அது மட்டுமின்றி உடனடியாக போஸ்டரில் உள்ள காளி படத்தை நீக்க வேண்டும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
Source: TopnewsTamil
Image Courtesy: கூகுளை
https://www.toptamilnews.com/if-vijay-antony-does-not-apologize-the-hindu-peoples-party-will-be-in-turmoil/