'நான் மணிரத்னம் முதல் படத்திற்கு இசை அமைக்க காரணம்' - இசைஞானி இளையராஜா கூறிய சுவாரஸ்யம்

மணிரத்னத்தின் முதல் படத்திற்கு இளையராஜா இசை அமைத்த காரணத்தை தற்போது கூறியிருக்கிறார்.;

twitter-grey
Update: 2022-04-27 10:30 GMT
நான் மணிரத்னம் முதல் படத்திற்கு இசை அமைக்க காரணம் - இசைஞானி இளையராஜா கூறிய சுவாரஸ்யம்

மணிரத்னத்தின் முதல் படத்திற்கு இளையராஜா இசை அமைத்த காரணத்தை தற்போது கூறியிருக்கிறார்.

இயக்குனர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் 'அக்காகுருவி' இளையராஜா இசை அமைப்பில் இப்படம் தற்போது உருவாகியுள்ளது, இந்த படத்தை டி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே 6ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படம் குறித்து இசைஞானி இளையராஜா கூறியதாவது, 'சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி மற்ற சினிமாக்கள் அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும் அப்படி 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படம் பார்த்த பொழுது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக குழந்தைகள் உலகத்தை வைத்து தந்துள்ளார்கள் என ஆச்சரியமாக இருந்தது.

ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றினால் தான் அவனை அது தாக்கினால் தான் இவன் உயரமான ஒன்றை உருவாக்க முடியும் இப்படி படம் எடுக்க முடியும், அது நம் இயக்குனர்களிடம் இல்லை. ஆனால் நம்மை இயக்குனர் சாமி அதே படத்தை நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என்ன நம்மூருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி எடுத்துள்ளார். இந்த மாதிரி புது இயக்குனர்கள் அதிகம் வர வேண்டும் என்றும் அவர்களுக்கு இசை அமைப்பதற்கு காரணம், அதுதான் மணிரத்னம் முதல் படத்திற்கு இசையமைத்த காரணமும். நல்ல படைப்புகள் வரவேண்டும் இப்படங்களை பொதுமக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும் என இளையராஜா கூறினார்.

Tags:    

Similar News