30 ஆண்டுகள் ஆனாலும் ரசனை குறையாத இசைஞானி பாடல் !

Cinema News.

Update: 2021-09-19 07:30 GMT

30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்படுத்தப்பட்டாலும் இன்னமும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்  இசைஞானி இளையராஜா 

சமீபத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு நடிப்பில் வெளிவந்த படம் 'டிக்கிலோனா', யுவனின் இசையில் வெளிவந்த இப்படத்தில் டைம் ட்ராவல், சந்தானம், யோகிபாபு காமெடி, தொடர் காமெடிகள் என பல விஷயங்கள் இருந்தாலும் படம் துவங்கி சரியாக 23'வது நிமிடத்தில் வரும் முதல் பாடலாகிய "பேர் வச்சாலும் வைக்காம போனாலும் போகாது மல்லி வாசம்" பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்கவும், கேட்கவும் தூண்டியுள்ளது. இப்பாடலில் அனகா, சந்தானம் நடனம் ரசிக்ப்பட்டாலும் பாடல் இசைக்கப்பட்ட விதம், பாடல் வரிகள்தான் பாடலின் சிறப்பே!

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், இசைஞானி இசையில், வாலியின் வரிகளில், மலேசியா வாசுதேவன், ஜானகி ஆகியோர் வசிய குரல்களில் எல்லாவற்றிற்கும் மேல் மாறுபட்ட வேடங்களில் தோன்றும் கமல் குறும்புகளில் அனைவரும் ரசித்த பாடலாக இந்த பாடல் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்றது. இந்த பாடலை அப்படியே மாறாமல் தான் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் உபயோகப்படுத்தியுள்ளார்.

30 ஆண்டுகள் கழிந்தாலும் மீண்டும் இப்பாடல் இணையங்களில் அதிகம் பகிரப்பட்டும், வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் ஸ்டேட்டஸாக உபயோகப்படுத்தப்பட்டும் பரவலாக வலம் வருகிறது.

காலங்கள் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும் இசைஞானியின் இசைக்கு ரசனை மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

Tags:    

Similar News