பாகுபலி வசூல் சாதனையை முறியடிக்க போகும் 'கே.ஜி.எஃப் 2'
இந்தியாவில் மட்டும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து 'கே.ஜி.எஃப் 2' சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து 'கே.ஜி.எஃப் 2' சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சீனிதி ஷெட்டி, சஞ்சய்தத் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கே.ஜி.எப் 2', மிகப்பெரும் வெற்றி அடைந்த இத்திரைப்படம் இந்தியாவில் மட்டும் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வ விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தியா அல்லாத பிற பகுதிகளில் இதுவரை 200 கோடி வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது, மேலும் பாகுபலியின் இந்திய வசூல் சாதனையான 1050 கோடியை முறியடிக்க இன்னும் 50 கோடிதான் தேவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.