தனுஷின் அடுத்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறதா..?

தனுஷின் அடுத்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறதா..?

Update: 2021-01-30 16:37 GMT

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து தற்போது தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். அந்தவகையில் கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு 50% சதவீதம் இருக்கையுடன் திறக்கப்பட்டன. எனவே தியேட்டர் திறந்து தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும், நல்ல வசூலையும் பெற்றது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' திரைப்படம் முதலில் OTT-யில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டாலும் அதன் பின்னர் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.தற்போது மீண்டும் ஓடிடியில் இந்தத் திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT-யில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷின் இப்படம் OTT-யில்  ரிலீசாகுமா இல்லை தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News