"ஹிந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமாவா?" - அடுத்த சர்ச்சையை கிளப்பிய சிரஞ்சீவி

ஹிந்தி சினிமாக்கள் மட்டுமே இந்திய சினிமா என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர் என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளார்.

Update: 2022-05-03 06:45 GMT

ஹிந்தி சினிமாக்கள் மட்டுமே இந்திய சினிமா என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர் என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளார்.



சமீப நாட்களாக ஹிந்தி தொடர்பான விவாதங்கள் திரையுலகிலும் புகுந்து அதிகரித்து வருகிறது, இதுகுறித்த சர்ச்சைகள் நாளொன்றுக்கு செய்திகளாக வரும் நிலையில் தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி அடுத்தபடியாக ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். 'ஆச்சாரியா' படத்தின் வெளியீட்டு தொடர்பான நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது அப்போது பேசிய நடிகர் சிரஞ்சீவி இதை குறித்து கூறினார்.

அவர் கூறியதாவது, '1988'இல் நான் ருத்ரவீணை என்ற படத்தை தயாரித்து நடித்துளேன் இந்த படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தன. இதைப் பெற்றுக் கொள்வதற்காக டெல்லி சென்றோம் விருது வழங்கும் விழாவுக்கு முன்னதாக தேனீர் விருந்து நடந்தது அந்த விருந்தில் நடந்த கூட்டத்தின் சுவர்கள் பிரிதிவி ராஜ் கபூரும் ராஜ் கபூர், அமிர்தா பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன, அவர்களை குறித்து புகழ்ந்து எழுதப்பட்டிருந்தன.





தென் மாநிலம் தொடர்பாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பிரேம் நசீர் புகைப்படங்கள் மட்டுமே இருந்தன. நடிகர்கள் சிவாஜி கணேசன், ராஜ்குமார், என்.டி.ராமாராவ், விஷ்ணுவர்தன் புகைப்படங்கள் அங்கு இடம் பெறவில்லை இது என் மனதை மிகவும் பாதித்தது ஹிந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமா என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். இதனால் தென் மாநில சினிமாவின் அவமானப்படுத்துவதாக உணர்ந்தேன், ஆனால் தற்பொழுது பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் தென் இந்திய பெருமையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளன' சிரஞ்சீவி கூறினார்.

Similar News