அஜித்துக்கு விஜய் சேதுபதி வில்லனா? - விக்னேஷ் சிவன் கூறிய சுவாரஸ்யம்

அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்ற கேள்விக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.

Update: 2022-05-03 10:30 GMT

அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்ற கேள்விக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.




இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார், லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க வருகிறார் என்ற தகவல் தற்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது.



இந்த நிலையில் இதுபற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதாவது, 'விஜய் சேதுபதியை எப்பொழுதும் என் படங்களில் கதாநாயகனாக மட்டும் தான் நடிக்க வைப்பேன் ஒருபோதும் அவரை எனது படங்களில் வில்லனாக நடிக்க வைக்க மாட்டேன்' எனக்கூறி அஜித்துக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Similar News