"மகிழ்ச்சி என்பது உங்களது சொந்த அலைகளை உருவாக்குவது" என தத்துவம் உதிர்த்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக வலம் வரும் சில நடிகைகளில் காஜல் அகர்வால் முக்கியமானவர். தென்னிந்திய அளவில் அதிகம் பேர் பின் தொடரும் நடிகையாகவும், நிறைய படங்களில் கமிட் ஆகும் நடிகையாகவும் வலம் வருகிறார் காஜல் அகர்வால்.
தற்பொழுது படப்பிடிப்பு இடைவெளியில் ஓய்வில் இருக்கிறார், இந்த நிலையில்தான் "மகிழ்ச்சி என்பது உங்களது சொந்த அலைகளை உருவாக்குவது, ஒரு நல்ல மனநிலையை உருவாக்க ஒரே ஒரு நீச்சல் போதும்" என நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தினை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களால் அதிகம் பகிரப்படுட்டு வருகிறது.