ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த கமல்ஹாசன்
தற்பொழுது ரஜினிகாந்த் படத்தின் சாதனையை கமலஹாசன் 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் முறியடித்துள்ளது.
தற்பொழுது ரஜினிகாந்த் படத்தின் சாதனையை கமலஹாசன் 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் முறியடித்துள்ளது.
தற்பொழுது வெளியாகும் படங்களின் டிரைலர்கள், பாடல்கள் யூடியூபில் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்கிறதோ அதுவே வெற்றி என பார்க்கப்படுகிறது. அது வகையில் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' ட்ரெய்லர் 7 லட்சம் லைக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. ரஜினி பட ட்ரைலரில் அதிகபட்ச பார்வையாளர்களைப் பெற்ற இதே தர்பார் ட்ரைலர் தான் 20 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளது.
இந்நிலையில் தர்பார் பட ட்ரெய்லர் லைக்குகளை 'விக்ரம்' பட ட்ரைலர் முறியடித்துள்ளது. விக்ரம் ட்ரைலருக்கு ஒரு மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது, 16 மில்லியன் பார்வைகளை இந்த கடந்துள்ளது விரைவில் 20 மில்லியன் பார்வைகளை 'விக்ரம்' பட ட்ரைலர் கடந்து விடும் வாய்ப்புள்ளது.