கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்!

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2021-11-26 13:54 GMT

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கா சென்று நாடு திரும்பிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியது. இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 22ம் தேதி பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.


இந்நிலையில், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் மிகவும் நல்ல முறையில் தேறி வருகிறார். எனவே அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Twiter

Image Courtesy: Samayam


Tags:    

Similar News