குரூர கற்பனையில் 'கண்ணகி' பட போஸ்டர் !

Cinema News.

Update: 2021-08-16 09:00 GMT

கர்ப்பிணி'களை இழிவுபடுத்தும் கண்ணகி பட போஸ்டர்.




 


நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு 'கண்ணகி' என்ற பெயரில் ஒரு படத்தின் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் கர்பிணியாக கீர்த்தி பாண்டியன் நின்றுகொண்டிருக்க அவர் வயிற்றில் இருந்து தொப்புள் கொடி ஒன்று வெளியில் வர அதனை திரி போல் ஒரு கை பற்ற வைப்பது போன்ற அபத்தமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.




 


கர்ப்பிணிகளை மிக கொடூரமாக சித்தரிக்கும் வகையில் வெளியான இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன். ஏற்கனவே பல சமயங்களில் பெண்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டு, துன்புறுத்தப்படும் நிகழ்வுகள் வழக்குகளாக மக்களுக்கு அறியப்படும் வேளையில் இது போன்ற குரூர எண்ணம் படைத்த போஸ்டர்கள் ஆபத்தானவை. இந்த போஸ்டரில் இயக்குனர் பெயர் போடாமல் ஒளிந்து இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Similar News