கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!;

Update: 2021-02-20 18:51 GMT

இந்திய கிரிகெட் அணிக்கு முதன்முறையாக உலகக் கோப்பை பெற்றுத் தந்தவர் கபில்தேவ். அந்த வகையில் பல்வேறு நட்சத்திரங்களின் பிரபலங்களின் வாழ்க்கை மையமாக வைத்து வெற்றி படங்களாக அமைந்த நிலையில் கபில்தேவ் 83 என்ற படமும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.


 

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூன் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படத்தில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் மற்றும் அவருடைய மனைவி வேடத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்திருக்கிறார். கபீர் கான் இயக்கத்தில் ஜூலியஸ் பாக்கியம் என்பவர் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News