தமிழில் 100 கோடி குவித்த 'கே.ஜி.எப் 2' - வசூல் மன்னனான ராக்கி பாய்

தமிழில் 100 கோடி வசூல் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளது 'கே.ஜி.எப் 2' திரைப்படம்.

Update: 2022-05-05 09:10 GMT

தமிழில் 100 கோடி வசூல் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளது 'கே.ஜி.எப் 2' திரைப்படம்.




இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சீனிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா தாண்டன் நடித்து கடந்த மாதம் வெளியான படம் 'கே.ஜி.எப் 2' வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் பெரும் வெற்றியைப் பெற்றது. கன்னடத்தில் இதுவரை 160 கோடி ரூபாயும் தெலுங்கில் 130 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ள கேஜிஎப் திரைப்படம் தமிழில் 100 கோடி வசூலை நெருங்குகிறது.





தமிழில் 'பாகுபலி 2' க்கு பிறகு ஒரு வேற்று மொழி படம் 100 கோடி வசூலிப்பது இதுவே முதல் முறை, அதுவும் ஒரு கன்னடப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 100 கோடி வசூல் என்பது வரலாற்றில் இதுவரை நிகழ்ந்தது கிடையாது இதனை 'கே.ஜி.எப் 2' நிகழ்த்தியிருக்கிறது.

Similar News