துவங்குகிறது 'டிமான்டி காலனி 2' - விரைவில் படப்பிடிப்பு
டிமான்டி காலனி இரண்டாம் பாகம் ரெடியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
டிமான்டி காலனி இரண்டாம் பாகம் ரெடியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான படம் 'டிமாண்டி காலனி' பெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இது குறித்து அறிவிப்பை இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், 'பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் டிமான்டி காலனி இரண்டாம்பாகம் பற்றி ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்ததால் அதற்கான திரைக்கதையை வடிவமைக்க துவங்கினேன். இறுதியில் அருள்நிதிக்கு மிகவும் பிடித்து இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பமாக இருக்கிறது' என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.