எனக்கு கொரோனாலாம் இல்லிங்க.. பதறி அடித்து செல்பி போட்ட நடிகர் சிவகுமார்.!

எனக்கு கொரோனாலாம் இல்லிங்க.. பதறி அடித்து செல்பி போட்ட நடிகர் சிவகுமார்.!

Update: 2020-12-01 19:13 GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகமே நடுங்கி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்துகள் சோதனை ஓட்டத்திலே உள்ளது. பொது பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. இதனால் பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இறந்துள்ளனர். அதில் சிறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் கொரோனா வைரஸால் இறந்துள்ளார். அவரது மறைவு இந்திய சினிமாவிற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கின்றனர்.


இந்நிலையில், நடிகர் சிவகுமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்து விட்டதாகவும், இதன் காரணமாக அவர் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சமூக வலைதளங்கில் செய்திகள் வைரலாக பரவி வந்தது.


இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தன் வீட்டிலிருந்து ஒரு செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகுமார். மேலும் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது எங்க யாருக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது என்று யாராலும் கணிக்க முடியாது. எனவே அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் கொரோனாவில் இருந்து விரைவில் விடுபட முடியும்.
 

Similar News