வந்தான், சுட்டான், போனான், ரிப்பீட்டு - கலகரப்பாக வெளியானது "மாநாடு" ட்ரெய்லர் !

Update: 2021-10-02 08:15 GMT

"வந்தான், சுட்டான், போனான், ரிபீட்டு" என சுவாரஸ்ய விஷயங்களுடன் சிம்பு'வின் மாநாடு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.




 


வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் பலர் நடிக்கும் 'மாநாடு'. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது.




 


டைம் லூப் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்பது ட்ரெய்லரில் நன்றாக தெரிகிறது. ஒரே சம்பவம் அதுவும் முதலமைச்சரை கொல்லும் சம்பவம் என்ற ஒன்றை சம்பவத்தை வைத்து கதையை வெங்கட்பிரபு இயக்கியிருப்பார் போலும். சிம்பு'வின் விறுவிறுப்பு, எஸ்.ஜே.சூர்யா'வின் வழக்கமான கலகல பாணி நடிப்பு படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டுகின்றன. குறிப்பாக "வந்தான், சுட்டான், போனான், ரிப்பீட்டு" ரசிகர்கள் மத்தியில் பரலவாக பேசப்படும்.

Tags:    

Similar News