விஜய் ஹீரோ'வாக, அஜித் வில்லனாக 'மங்காத்தா 2' - வெங்கட் பிரபு கூறும் சஸ்பென்ஸ்
மங்காத்தா-2 பற்றிய தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்.
மங்காத்தா-2 பற்றிய தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்.
மாநாடு படத்தை அடுத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்தபடியாக தெலுங்கு மற்றும் தமிழில் நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெங்கட்பிரபு மங்காத்தா படம் பற்றிய தகவலை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியதாவது, 'மங்காத்தா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் சிறப்பான கதையை தயார் செய்து வைத்துள்ளேன். அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் வைத்து மங்காத்தா-2 எடுக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் அவர்களிடம் கூறிவிட்டேன் மங்காத்தா-2 விரைவில் உருவாகும்' எனவும் கூறியுள்ளார்.