தனது இசை ரசிகர்களுக்காக பிறந்தநாள் பரிசளிக்க போகும் இசைஞானி இளையராஜா

தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக மிகப்பெரும் கச்சேரி விருந்தை நடத்திவிருகிறார் இசைஞானி இளையராஜா.

Update: 2022-05-12 13:15 GMT

தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக மிகப்பெரும் கச்சேரி விருந்தை நடத்திவிருகிறார் இசைஞானி இளையராஜா.





தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளரும், தமிழர்களின் மத்தியில் நீங்கா இடம்பெற்ற இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் வரும் ஜூன் 2-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் கோவை கொடிசியா வளாகத்தில் இசைக்கச்சேரி நடத்துகிறார் இளையராஜா.




இந்த கச்சேரி குறித்து இளையராஜா கூறுகையில், 'எனது பிறந்த நாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்' என அழைப்பு விடுத்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இளையராஜா தரப்பு தெரிவித்துள்ளது.

Similar News