விருதுடன் நயன், சிவன் ஜோடி !

விக்னேஷ் சிவன் ஜோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2021-08-09 07:15 GMT

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த 'கூழாங்கல்' படம் வென்ற டைகர் விருது தற்போது சென்னை வந்தடைந்துள்ளது.




 


தமிழ் திரையுலகின் ஹாட் ஜோடியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த படம் 'கூழாங்கல்'. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான டைகர் விருதை வென்றது.




 


கொரோனோ காரணமாக இந்த விழாவில் நயன், விக்னேஷ் ஜோடியால் கலந்துகொள்ள இயலவில்லை! எனவே விருதை வழங்கும் அமைப்பு அந்த விருதை சென்னை அனுப்பியது. வந்தடைந்த விருதுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News