மலையாள படத்தில் விஜய்சேதுபதியுடன் கைகோர்க்கும் நித்யா மேனன்.!

மலையாள படத்தில் விஜய்சேதுபதியுடன் கைகோர்க்கும் நித்யா மேனன்.!;

Update: 2020-11-10 16:53 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய்சேதுபதி இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் மலையாள படமான 19(1)(a) படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

19(1)(a) திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரள வனப்பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்க இதில் நித்யா மேனன் தான் நடித்த காட்சியை கேமராவில் சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி நம்ம ஷாட் வந்தா பாத்துக்கலாம் என சுவாரஸ்யமாக ஃபோனை பார்த்துக்கொண்டு படப்பிடிப்பில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இப்பொழுது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஏதாற்த்த நடிப்பினால் தமிழக மக்கள் மனதை மட்டுமல்லாமல் மலையாள மக்களின் மனதையும் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News