தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Update: 2021-02-14 17:13 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி இந்தி மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' திரைப்படத்தின் புரொடக்ஷன் பணிகள்  நடைப்பெற்று வந்த நிலையில்  தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவரது சமூக வலைத்தளத்தில் கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தனுஷ் சிறப்பான முறையில் டப்பிங் பணியை முடித்து உள்ளார் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து முக்கிய அறிவிப்பு வந்துள்ளது.இந்த படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா நடித்துள்ளார். மேலும் முக்கிய துணை கதாபாத்திரங்களாக நடிகை லட்சுமி, பிரியா, யோகிபாபு மற்றும் மலையாள நடிகர் யால் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டின் மெகா ஹிட் அடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News