மாஸ்டரை தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ‘இன்ப’ அதிர்ச்சி செய்தி.!
மாஸ்டரை தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ‘இன்ப’ அதிர்ச்சி செய்தி.!
நடிகர் விஜய்யின் 66வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மற்றும் விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் வெளியாகி கொரோனாவுக்கு இடையிலும் வெற்றிநடை போடுகிறது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல தரப்பு மக்களும் படம் அருமையாக உள்ளது என ரீவிஸ் கொடுப்பதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் 66வது படத்தை கோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை லலித் குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது வெளியான மாஸ்டர் படத்தில் இதுவரை பார்க்காத ஸ்டைலான விஜய்யை லோகேஷ் காட்டியிருக்கிறார். தற்போது விஜய்யின் 66வது படம் குறித்து அப்டேட் வெளியாகி இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.