விஜய் தேவரகொண்டா ஜோடியாகும் பூஜா ஹெக்டே

விஜய் தேவரகொண்டா புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார்.

Update: 2022-05-19 05:52 GMT

விஜய் தேவரகொண்டா புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார்.




இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தற்போது 'லைகர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் தேவரகொண்டா, அடுத்தபடியாக மீண்டும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். 'ஜன கண மன' அந்த படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா விமான படை அதிகாரியாக நடிக்கிறார்.



'ஜன கண மன' படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் அமைக்கப்பட உள்ள நிலையில் இப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியப் படமாக இப்படம் வரும் 2023'ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News