தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்!

தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்!;

Update: 2021-01-18 16:53 GMT

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் சிறு படங்கள் முதல் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளியானது என்பதும் 5 இணை இயக்குநர்களின் சிறு படங்கள்  மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.


 

இந்தநிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக மணி ரத்னம் தயாரிக்கும் அடுத்த ஆந்தாலஜி திரைப்படம் 'நவரசா' என்பதும் இந்த திரைப்படத்தில் 9 இயக்குனர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இவற்றில் ஒரு பகுதியை இயக்குனர் பொன்ராம் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் அந்த பகுதியை இயக்க இருப்பதாகவும், அவர் இயக்க இயக்கும் பகுதியில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து பிரியதர்ஷன் இயக்கும் இந்த படம் பெரும் வரவேற்பை பெறும் என்றும், யோகிபாபுவின் காமெடி கலந்த நடிப்பு அந்த படத்தை சுவராசியமாக மாற்றும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. 'நவரசா' ஆந்தாலஜி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News