2 புதிய மிரட்டலான போஸ்டர்களுடன் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் !
2 மிரட்டலான போஸ்டர்கள் மூலம் புதிய திகில் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
முனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காமெடி கலந்த திகில் படங்களின் ட்ரெண்டை அறிமுகப்படுத்திய ராகவா லாரன்ஸ் எப்படியாவது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வகையில் படங்களை புதிதாக வெளியிட்டுவிடுவார்.
அந்த தொடர் வரிசையில் தற்பொழுது "துர்கா" என்ற புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தாடியுடன் மிரட்டல் தோற்றத்தில் ஒரு போஸ்டரும், இளமை தோற்றத்தில் சிரித்தபடி ஒரு போஸ்டரும் வெளியிட்டுள்ளார். இந்த இரு போஸ்டர்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.