'தலைவி' படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியுள்ள தலைவி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-13 09:09 GMT

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியுள்ள தலைவி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக படம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த சாமியும் நடித்துள்ளனர். அதே போன்று கருணாநிதி வேடத்தில் நடிகர் நாசர் நடித்துள்ளார்.


இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி தமிழில் நல்ல வசூலை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'தலைவி' திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு படக்குழுவை பாராட்டியிருப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Source: Twiter

Image Courtesy:Free Press

Tags:    

Similar News