மாதவன் நடிப்பில் உருவாகிறதா ரதன் டாடா பயோபிக்.?

மாதவன் நடிப்பில் உருவாகிறதா ரதன் டாடா பயோபிக்.?

Update: 2020-12-11 19:15 GMT

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர் தற்போது சில படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் தற்போது மாறா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த சார்லி படத்தின் ரீமேக்காகும்.

இந்நிலையில் நடிகர் மாதவன் அடுத்ததாக ரதன் டாடாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. மேலும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாகவும் போஸ்டர்கள் இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு  வந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் மாதவன் அவரது ட்விட்டர் பக்கத்தில், ''இது முற்றிலுமாக ஒரு தவறான செய்தி. யாரோ சில ரசிகர்கள் விருப்பப்பட்டு இந்த போஸ்டர்களை உருவாக்கியுள்ளனர்.

அப்படி எந்த பிராஜக்ட் குறித்து நான் அடுத்து விவாதிக்க கூடவில்லை'' என தெரிவித்துள்ளார். ஆனால் இதை அறிந்த அவரது ரசிகர்கள்  இப்படி ஒரு படம்  உருவாகவில்லையா என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News