விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும் 'ஆந்தாலஜி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும் 'ஆந்தாலஜி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கொரோனா ஊரடங்கு காரணமாக முன்னணி இயக்குனர்கள் பலர் ஆந்தாலஜி திரைப்படம் எடுக்கத் துவங்கி உள்ளனர். அப்படங்களின் ஒரு தொகுப்பு 30 நிமிடம் என்றாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'குட்டி ஸ்டோரி' என்ற பாடல் ஹிட் ஆன நிலையில் தற்போது விஜய் சேதுபதி, அமலாபால் 'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜி படமாக உருவாகியுள்ளது.
இந்த குட்டி ஸ்டோரி படத்தில் விஜய் சேதுபதி, அமலாபால், அதிதிபாலன், வருண், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
எனவே திரைப்படத்தில் 4 பகுதிகள் உள்ளன என்பதும் இந்த பகுதிகளை கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் விஜய்சேதுபதி மற்றும் அதிதி பாலன் பகுதியை நலன்குமாரசாமி இயக்கியுள்ளார்.
அதேபோல் கௌதம் மேனன் மற்றும் அமலாபால் பகுதியை கெளதம் மேனனும், வருண்- மேகா ஆகாஷ் பகுதியை விஜய்யும், சாக்சி அகர்வால் பகுதியை வெங்கட்பிரபுவும் இயக்கியுள்ளனர்.
மேலும் குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அமலாபால்,விஜய்சேதுபதி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளனர்.இப்படம் பிப்ரவரி 12-ஆம் தேதி OTT-யில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குட்டி ஸ்டோரி படத்தில் முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரசிகர்களும், பிரபலங்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
Thrilled to share the FL of the first project I worked on during the pandemic, an anthology with @menongautham, it has been my dream to work with him and what an absolute pleasure it has been! #KuttiStory ❤️ by @IshariKGanesh #KuttiStoryFromFeb12#ItsAllAboutLove pic.twitter.com/o3jNteBryf
— Amala Paul ⭐️ (@Amala_ams) February 1, 2021