ஆரியை எதிர்த்த ரியோ: அடுத்த டார்கெட் இவர்தானா?

ஆரியை எதிர்த்த ரியோ: அடுத்த டார்கெட் இவர்தானா?

Update: 2021-01-04 17:39 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் யார்  போட்டியாளர்கள் என்று சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் ப்ரோமோவில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன்  நடக்கும் நிலையில் இன்று கடைசி நாமினேஷன்  நடைபெறுகிறது.

அதில் ஆரி முதல் நபராக வந்து ரியோவை நாமினேட் செய்கிறார். நானும் பாலாவும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு சில விஷயங்களை ரியோ கூறினார். அது குறித்து நான் அவரிடம் விளக்கம் கேட்டபோது அவரது விளக்கம் எனக்கு முழு திருப்தி இல்லை. அதனால் அவரை நான் நாமினேட் செய்கிறேன் என்று கூறினார்.

அடுத்து வந்த சோம், பாலா மற்றும் ஆரி ஆகிய இருவரையும் நாமினேட் செய்வதாகவும் ஆரி கோபம் நல்லது இல்லை என்றும் அதை தவிர்க்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.மேலும் நாமினேட் செய்ய வந்த ரியோ, பொண்ணு வந்தபோது கூட டாஸ்க்கில் இருந்தேன், இவன் அதை பார்க்காமல் வேறு எதையோ சொல்லி இருக்கானே என்று ஆரி கூறியதாகவும், நான் ஒரு இடத்தில் தப்பாக தெரிய வாய்ப்பு இருக்கிறது என்றும் நான் அந்த அளவுக்கு கேவலமானவன் இல்லை என்றும் ஆரிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இன்றைய நாமினேஷனில் பாலா மற்றும் ஆரி நாமினேஷன் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

வேறு யார்  நாமினேஷனில் உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்தவாரம் அதிகப்படியாக ரியோ நாமினேஷனில் வந்தாள் அவர் வெளியேறுவார் என்று ஆரி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News