மூன்று நாளில் ₹7.5 கோடி வசூலை வாரிக் குவித்த 'ருத்ர தாண்டவம்'!

திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘ருத்ரதாண்டவம்’. இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சின்னத்திரை பிரபலம் தர்ஷா குப்தா நடித்துள்ளார். மேலும், வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

Update: 2021-10-05 06:39 GMT

திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் இயக்கியுள்ள திரைப்படம் 'ருத்ரதாண்டவம்'. இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சின்னத்திரை பிரபலம் தர்ஷா குப்தா நடித்துள்ளார். மேலும், வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.


கடந்த (அக்டோபர் 1) வெள்ளிக்கிழமை இப்படம் திரைக்கு வந்தது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்குகளுக்கு வருவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் ₹7.5 கோடி வசூலை குவித்துள்ளது.

மேலும், இப்படம் வசூலை அள்ளும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் படக்குழு மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Tags:    

Similar News