'ருத்ரதாண்டவம்' மோகன்ஜி'யுடன் இணைந்த செல்வராகவன் !

Update: 2021-12-05 10:45 GMT

'ருத்ரதாண்டவம்' இயக்குனர் மோகன்ஜி தனது அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவனை வைத்து உருவாக்கவுள்ளார்.




 


'பழைய வண்ணாரப்பேட்ட'யில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் மோகன்ஜி, திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்த இயக்குனர் மோகன்ஜி தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை நேற்று மாலை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார்.




 


அந்த அறிவிப்பில் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் இயக்குனர் மோகன்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News