விஜய் 67'ல் வில்லனாக இணைந்த சஞ்சய் தத்

'விஜய் 67' படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-04-28 10:45 GMT

'விஜய் 67' படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.




தற்பொழுது விஜய் இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் 66 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய் ஜோடியாக நடிக்க தமன் இசையமைக்கிறார். 'விஜய் 66' முடிந்த கையுடன் அடுத்தபடியாக விஜய் 67 படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார் விஜய்.




இந்நிலையில் 'விஜய் 67' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது, அதன்படி மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க சஞ்சய் தத் வில்லனாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இது பான்-இந்தியா படமாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News