"வெந்த தணிந்தது காடு" வெளிவர வேண்டும் -சிம்பு ரசிகர்கள் !

"நதிகளிலே நீராடும் சூரியன்" தான் "வெந்து தணிந்தது காடு" என மாறியுள்ளது.

Update: 2021-08-08 07:30 GMT

"நதிகளிலே நீராடும் சூரியன்" தான் "வெந்து தணிந்தது காடு" என மாறியுள்ளது.




 


சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி ஏற்கனவே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் "நதிகளிலே நீராடும் சூரியன்" படத்தை அறிவித்தனர். கொரோனோ இரண்டாம் அலை மற்றும் வேறு சில பிரச்சனைகள் காரணமாக அந்த படம் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.




 


இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தில் உருவான "வெந்து தணிந்தது காடு" படத்தை துவங்கியுள்ளனர் கௌதம் மேனன், சிம்பு குழுவினர். இதன் படப்பிடிப்பு திருச்செந்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் துவங்கியுள்ளது. இந்த படம் தடையில்லாமல் வெளிவர வேண்டும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News