சிம்புவின் ஆன்மீக வீடியோ.! இணையத்தில் வைரல்.!

சிம்புவின் ஆன்மீக வீடியோ.! இணையத்தில் வைரல்.!;

Update: 2020-12-31 16:26 GMT
சிம்புவின் ஆன்மீக வீடியோ.! இணையத்தில் வைரல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. இந்நிலையில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும்,தற்போது  நடித்து வரும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்பு ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்கு சிம்பு சென்றுள்ளார் என்பதும் அவர் திரும்பி சென்னை வந்ததும் 'மாநாடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.மேலும் சிம்புவுடன் ஐயப்பன் கோவிலுக்கு அவரது நெருங்கிய நண்பரான நடிகர் மகத்தும் சென்று உள்ளதாக தெரியவருகிறது. சிம்புவும் மகத்தும் கோவில் ஒன்றின் கெளசாலாவுக்கு சென்ற ஆன்மீக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் அதை பார்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

எனவே கெளசாலாவில் வளர்ந்து வரும் கோவில் மாடு ஒன்றுக்கு சிம்புவும் மகத்தும் வாழைப்பழம் ஊட்டுவது குறித்த காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன என்பதும், இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .

Similar News