'காட்பாதர்'ரில் சிரஞ்சீவியுடன் இணையும் பாலிவுட் பிரபல ஹீரோ இவரா ?

Cinema Updates.

Update: 2021-08-17 08:00 GMT

சிரஞ்சீவியின் 'காட்பாதர்' படத்தில் பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




 


பெரும் வெற்றிபெற்ற 'லூசிபர்' மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மோகன்ராஜா இயக்கும் இப்படத்திற்கு 'காட்பாதர்' என்ற தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.




 


இதில் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் விரைவில் ஐதராபாத் வரப்போவதாகவும், அதனை சிரஞ்சீவி அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News