ஆஸ்கர் பட்டியலில் இருந்து சூரரை போற்று திரைப்படம் வெளியேறியது.!

ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை போற்று திரைப்படம் வெளியேறியுள்ள சம்பவம் அப்படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Update: 2021-03-16 12:27 GMT

ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை போற்று திரைப்படம் வெளியேறியுள்ள சம்பவம் அப்படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திரைத்துறையினருக்கு கிடைக்கும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் மட்டுமே. இதனை பெறுவதற்கு கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை உள்ள நடிகர்கள், இயக்குனர், மற்றும் இசைப்பாளர்கள் போட்டி போடுவது வழக்கம்.


 



அதே போன்று இந்தியாவிலிருந்து நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆஸ்கர் குழு வெளியிட்ட 366 படங்கள் கொண்ட பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய 3 பிரிவுகளில் சூரரை போற்று படம் இடம்பிடித்திருந்தது.

இந்நிலையில், நேற்று வெளியான இறுதி பட்டியலில் சூரரை போற்று திரைப்படம் எந்த பிரிவிலும் தேர்வாகாமல் வெளியேறியது.

இதனால் சூரரைப் போற்று படக்குழு மிகவும் அதிச்சியில் உள்ளது. எப்படியும் தங்களுக்கு விருது கிடைக்கும் என கடைசி வரை நம்பிக்கையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News