இதுவரை 5 கோடி பேர் பார்த்த 'கே.ஜி.எஃப் 2'

மிகவும் வெற்றிபெற்ற 'கே.ஜி.எப் 2' திரைப்படத்தை இதுவரை 5 கோடி மக்கள் பார்த்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-05-12 13:15 GMT

மிகவும் வெற்றிபெற்ற 'கே.ஜி.எப் 2' திரைப்படத்தை இதுவரை 5 கோடி மக்கள் பார்த்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.





இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சீனிதி ஷெட்டி, சஞ்சய்தத் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கே.ஜி.எப் 2' திரைப்படம். இந்தியாவில் மொத்தம் 6300 திரையரங்குகளிலும், 3700 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது வெளியான நாள் முதல் அதிக வரவேற்பைப் பெற்ற இந்த படம் தற்போது வரை 1170 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.




இந்த நிலையில் 'கே.ஜி.எஃப் 2' படத்தை இதுவரை 5 கோடி ரசிகர்கள் பார்த்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சினிமாவில் கடந்த நூற்றாண்டு காலத்தில் அதிக பேர் பார்த்த பட்டியலில் முதலிடத்தில் 'பாகுபலி 2' உள்ளது இதனை 10 கோடி பேர் பார்த்துள்ளனர், அந்த பட்டியலில் 5 கோடி பேர் பார்த்த நிலையில் 3'வது இடத்தில் 'கே.ஜி.எஃப் 2' இடம் பிடித்துள்ளது.  

Similar News