அங்காடிதெரு பட இயக்குனர் வசந்தபாலனின் அடுத்த படம்: என்ன தெரியுமா..?

அங்காடிதெரு பட இயக்குனர் வசந்தபாலனின் அடுத்த படம்: என்ன தெரியுமா..?

Update: 2021-02-10 18:22 GMT

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான வசந்தபாலன் ஆல்பம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக  அறிமுகமாகி, அதன்பின்  வெயில் என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றதையடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். அந்தவகையில் வசந்தபாலன் இயக்கிய அடுத்த படமான 'அங்காடித்தெரு' திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்த 'ஜெயில்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவும் உள்ளது. இந்நிலையில் வசந்தபாலன் ட்வீட்டரில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில்  புகைப்படம் ஒன்றை தற்போது வசந்தபாலன் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நற்செய்தி விரைவில் என்று பதிவிட்டுள்ளார்.

வசந்தபாலன் அவரது அடுத்த படத்தில்  விருதுநகரில் அவர் படித்த பள்ளி நண்பர்களுடன் இணைந்து கைகோர்த்து தொடங்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதை பார்த்த ரசிகர்கள் வித்தியாசமான கதையாக இருக்கும் என்றும்,இதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.

Similar News