ஆஸ்கார் விருது போட்டிக்கு தமிழ் படமான கூழாங்கல் தேர்வு: உற்சாகத்தில் விக்னேஷ் சிவன்!
ஆஸ்கார் விருது போட்டிக்கு தமிழ் படமான கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளதை இயக்குனர் விக்னேஷ் சிவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்கார் விருது போட்டிக்கு தமிழ் படமான கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளதை இயக்குனர் விக்னேஷ் சிவன் உறுதிப்படுத்தியுள்ளார். 94வது அகாடெமி விருதுகள் (ஆஸ்கார்) அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் சார்தார் உத்தாம், ஷேர்னி, செல்லோ ஷோ, மற்றும் தமிழ் படங்களான கூழாங்கல், மண்டேலா உள்ளிட்ட ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்தது.
மொத்தம் 15 நடுவர்கள் மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்வையிட்டனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் கூழாங்கல் தயாரிக்கப்பட்டது. 2022ம் ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக கூழாங்கல் அமைந்து உள்ளது.
இதனை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா சார்பில் தமிழ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ள கோலிவுட், பாலிவுட் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Source, Image Courtesy: Twiter