சித்ராவிடம் வீடியோவை காட்டி மிரட்டி வந்த பிரபல இளம் நடிகர்.?

சித்ராவிடம் வீடியோவை காட்டி மிரட்டி வந்த பிரபல இளம் நடிகர்.?;

Update: 2020-12-16 07:59 GMT

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் தவிர மேலும் பலர் சிக்குவார்கள் என்று போலீஸ் கூறியது. அதே மாதிரி அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களை அடுத்து நடிகர் ரக்ஷனும் தற்போது சிக்கியுள்ளார்.

நடிகை சித்ராவின் செல்போனுக்கு வந்த மெசேஜ்கள் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள், செல்போனில் இருந்த வீடியோக்கள் ஆகியற்றை வைத்து விசாரித்து வருகின்றனர் போலீசார். மேலும், சித்ராவுடன் நெருங்கி பழகியவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று சித்ராவை ஒரு அரசியல் பிரமுகர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அவர் அனுப்பிய மெசேஜ் மூலம் தெரியவந்துள்ளது. கடைத்திறப்பு விழாக்களுக்கு அதிகம் செல்வதால், அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், இளம் நடிகர் ஒருவரும் சித்ராவிடம் வீடியோவை காட்டி மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தவருமான இளம் நடிகர் ரக்ஷன், சித்ராவுடன் டேட்டிங் சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது சித்ராவுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வைத்து அவரை தொடர்ந்து மிரட்டி வந்ததாக, சித்ராவின் தோழி தெரிவித்திருக்கிறார். தற்போது ரக்ஷனின் மிரட்டல் விவகாரம் சின்னத்திரை மட்டுமின்றி சினிமா வட்டாரத்தையும் அதிர செய்கிறது.
 

Similar News