வசூலை குவித்த 'டான்' - SK'வுடன் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

'டான்' படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Update: 2022-05-19 01:00 GMT

'டான்' படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.




அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'டான்'. வெளியான 4 நாளில் 50 கோடி வசூல் பெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.




இந்நிலையில் 'டான்' படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். இதில் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி ஆகியோர் பங்கேற்றனர். இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது. 

Similar News