பிரமாண்டமாக நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கும் 'தி லெஜெண்ட்' இசை வெளியீட்டு விழா

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜெண்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

Update: 2022-05-21 06:44 GMT

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜெண்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.



இயக்குனர்கள் செய்து ஜெடி-ஜெர்ரி இயக்கத்தில் தொழிலதிபர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் படம் 'தி லைஜன்ட்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 29ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.




இந்த நிலையில் படத்தின் முதல்பார்வை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி மே 29-ஆம் தேதி நடக்கவிருக்கும் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

Similar News