விஷாலின் 'சக்ரா' படம் குறித்து நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு.!

விஷாலின் 'சக்ரா' படம் குறித்து நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு.!;

Update: 2021-02-17 17:16 GMT

விஷால் நடித்து தற்போது வெளிவரவிருக்கும் படம் சக்ரா. இப்படத்திற்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் இருந்த நிலையில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சக்ரா படத்தை திரையிட திடீரென தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் மேல் டிரைடண்ட் ஆர்ட்ஸ் தொடர்ந்த வழக்கில்  ஒரு முக்கிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிரைடன்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தங்களிடமும் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கி உள்ளதாக 'சக்ரா' படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தனுக்கு எதிராக புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த புகாருக்கு பதில் அளிக்குமாறு விஷால் மற்றும் இயக்குனர் ஆனந்தனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் விஷால் நடித்த 'சக்ரா' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் காப்பீட்டு உரிமை விவகாரத்தின் அடிப்படையில் சக்ரா திரைப்படம் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஷாலின் ரசிகர்கள் பிப்ரவரி 19-ஆம் தேதி சக்ரா படத்தை காண ஆவலாக இருந்த நிலையில் இச்செய்தி பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News