நடிகர் ஆர்யா பண மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது ! - ஜெர்மனி பெண் வழக்கறிஞர் பேட்டி!

நடிகர் ஆர்யா பணமோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Update: 2021-09-02 08:24 GMT

நடிகர் ஆர்யா பணமோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யா சமூக வலைதளம் மூலமாக தன்னிடம் பழகி 70 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 10ம் தேதி நடிகர் ஆர்யாவிடம் விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கடந்த 24ம் தேதி ஆர்யா போன்று நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்ததாக, சென்னையை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனியை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் ஆனந்தன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: முதல் தகவல் அறிக்கையில் ஆர்யாவை முதல் குற்றவாளியாக சேர்த்த காவல்துறை தற்போது வரை அவரை ஏன் கைது செய்யால் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினார்.

மேலும், ஜெர்மனி பெண்ணிடம் நடிகர் ஆர்யா பேசிய வீடியோ கால் மற்றும் அனைத்து ஆதாரங்களையும் வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் கேட்டு கடிதம் எழுதியிருப்பதாகவும், ஆர்யா பேசிய அனைத்து மெசேஜ்களையும நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 7

Image Courtesy:The New Indian Express

https://news7tamil.live/twist-in-actor-aryas-cheating-case.html

Tags:    

Similar News