நிவர் புயலை குறித்து பொதுமக்களுக்காக வைரமுத்து எழுதிய கவிதை.!
நிவர் புயலை குறித்து பொதுமக்களுக்காக வைரமுத்து எழுதிய கவிதை.!
தமிழில் மிகப்பிரபலமானவர் வைரமுத்து ரசிகர்கள் அனைவராலும் கவிப்பேரரசு என்று அழைக்கப்படுகிறார். நிவர் புயலைப் பற்றி கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து பொதுமக்களுக்கு ஒரு கவிதை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.தற்போது வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை எவ்வாறு மேற்கொள்வது எனவும்,தமிழக புதுவை அரசுகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் நிவர் புயல் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு டுவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் என பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு நாள் மட்டும் யாரும் வெளியே வரக்கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுரைகளை கூறிவருகின்றனர்.
எனவே கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்: போ புயலே போய்விடு பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல் வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல் குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல் பாமர உடல்களைப் பட்டம் விடாமல் சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? இவ்வாறு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.