'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவின் ஜோடி இவரா?
Heroine of Simbu's Next Film.
சிம்பு, கௌதம் வாசுதேவன் மேனன் கூட்டணியில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகி பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் தயாரிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மராத்தி நடிகையான இவர் ஏற்கனவே கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இது முதல் படமாகும்.